சுயநலம்
எழுதியவர்: யாழினி அத்தன்
நீ சுவாசித்த காற்று
நீ உண்ணிய உணவு
நீ பருகிய தண்ணீர்
நீ உடுத்திய உடை
நீ உறங்கிய இடம்
நீ பேசிய வார்த்தைகள்
.........................
இப்படி எதுவுமே
உன்னுடயதாய்
இருந்ததில்லை...
குருதியில் பிரதிபலிக்கும்
இயற்கைச் சூத்திரங்கள்...
கோடி செல்கள்
அனைத்திலும்
அதன் நிர்பந்தங்கள்..
அண்டயோனியின்
இயக்கத்தில்தான்
நீ எடுக்கும் ஓய்வு...
யாசகஞ்செய்து
நாட்களையோட்டும்
மனிதா...
நீ மட்டும்
எப்படி ஒரு
அதம சுயநலமியாக?
2 comments:
பீளமேடு பேர் பார்த்துட்டு சந்தோஷத்தில வந்தேன்...
வாழ்த்துக்கள்
மங்கை அவர்களே!
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி..
இந்த பீளமேடு-வின் கவிதைகளை
படிக்க அடிக்கடி என் இணைய தளத்திற்கு வாருங்கள்.
-யாழினி அத்தன்
Post a Comment