Thursday, April 12, 2007

அம்மா

-----------------------------
மரணவலி கொடுத்த
மட்டற்ற மகிழ்ச்சி
"அம்மா" அந்தஸ்து;
------------------------------
இருட்டு அறைக்குள்
கண்மூடிய நர்த்தனம்
கருவறையில் குழந்தை;
------------------------------
சிசுவின் அலுப்பில்
ஒவ்வொரு உதையிலும்
பெருமையின் வெளிப்பாடு;
------------------------------
எண்ணைக் குளியல்
வெந்நீரின் கதகதப்பில்
அம்மாவின் அன்பு;
-----------------------------
வெண்ணிலவின் ஆக்கிரமிப்பில்
நிரம்பிப் போயிருக்கும்
குழந்தையின் வயிறு;
-----------------------------
ஒற்றை மொழியில்
சர்வதேச சமத்துவம்
குழந்தையின் அழுகை;
-----------------------------
தொலைக்காட்சியில் கிரிக்கெட்
வீரர் எடுக்கும் சதம்
ஓடியாடும் அம்மா;
-----------------------------
அயல்நாட்டு வேலை
டாலரில் சம்பளம்
அம்மா விழியோரம் கண்ணீர்;
-----------------------------
அம்மாவைத் திட்டியவள்
தண்டனை பெறுகிறாள்
மாமியாராக;
-----------------------------
நதி மூலத்திற்கு
திரும்பாத நதி
அம்மா கருவறை;
------------------------------

14 comments:

said...

அனைத்துமே அழகு

//ஒற்றை மொழியில்
சர்வதேச சமத்துவம்
குழந்தையின் அழுகை;//

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.
சார், நீங்க பீளமேடுங்களா, நானும் அங்கே அண்ணாநகர் தானுங்க.

அப்படியே, Comment moderation enable செய்துள்ளதால், Word Verification ஐ தூக்கிவிடலாமே...

said...

கோவை மணி,

நம்மள சார்னு கூப்பிட்டு கமுத்தீட்டீங்களே. நீங்க ஏறக்குறைய பீளமேடு தான். உங்களை சந்திச்சதில் மிக்க மகிழ்ச்சி.

நீங்க சொன்ன மாதிரி word verification-ஐ தூக்கியாச்சு. அதனோட implications என்ன? மன்னிக்கவும், நான் கணனி நிபுணன் அல்ல.

said...

ரமேஷ்..

நிஜமாவே கிரிக்கெட் டீம் ஆரம்பிச்சரலாம் போல இருக்கே..:-) அதுவும் பீளமேடு டீம்.

said...

மங்கை,

வாங்க. நம்ம டீம் குறைந்தபட்சம் சூப்பர்-8 க்குள்ள நுழைஞ்சிடும். :-))

said...

//ஒற்றை மொழியில்
சர்வதேச சமத்துவம்
குழந்தையின் அழுகை//

எனக்குக்கூட இந்த வரிகள் மிகவும் பிடித்திருக்கின்றன. தொடர்ந்து எழுதிவாருங்கள்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி யாழினி அத்தன்.

said...

குறுங்கவிதைகள் நல்லாயிருக்கு..

சரி, Word verification-ஐத் தூக்கிட்டா எங்களுக்கெல்லாம் நொண்டுபிடிச்ச வேலை இருக்காது பாருங்க :-)

said...

//சிசுவின் அலுப்பில்
ஒவ்வொரு உதையிலும்
பெருமையின் வெளிப்பாடு //

அருமை!!

said...

Comment moderation - இந்த Option நீங்கள் விரும்பும் கமென்ட்களை மட்டும் வெளியிட.

Word verification - சில நேரம், Automated programs, நமது ப்ளாகில் விளம்பரங்களை கமெண்டாக போடும்.
(like spams in e-mail). அதை தடுக்க இந்த Option.

நேரமிருக்கையில் இதைப் படித்துப் பாருங்கள்:
http://en.wikipedia.org/wiki/CAPTCHA

//நம்மள சார்னு கூப்பிட்டு கமுத்தீட்டீங்களே//

பர்ஸ்ட் டைம்... கண்டுக்காதீங்க :)

//நிஜமாவே கிரிக்கெட் டீம் ஆரம்பிச்சரலாம் போல இருக்கே.அதுவும் பீளமேடு டீம். //

"பீளமேடு புயல்கள்" னு பேர் வைச்சுரலாமா? :))

said...

யாழினி அத்தன்:

ஒவ்வொன்றும் அழகு-ங்க!
மிகவும் இரசித்தேன்!

இயற்பெயர் மிரட்டலா இருக்கு... ;( புனைப்பெயர்..இதமா இருக்கு .. ;)

said...

மாசிலா,

உங்கள் கருத்துக்களை வெளியிட்டமைக்கு நன்றி.

குழந்தைகள் எல்லாவற்றையுமே அழுகை சைகையில்தான் சொல்லும். மொழிகள் பெரியவர்களுக்குத்தான். எல்லா நாட்டுக் குழந்தைகளுக்கும் மொழி ஒன்றல்லவோ!

said...

Word verification-ஐத் தூக்கிட்டா எங்களுக்கெல்லாம் நொண்டுபிடிச்ச வேலை இருக்காது பாருங்க

அரசியாரே,

ஏதோ இந்த அறிவிலி தெரியாத்தனமா தப்பு செஞ்சுட்டேன். WV-ஐ தூக்கியாச்சு. இனியும் நொண்டு பிடிக்கற வேலை இருக்கான்னு சொல்லுங்க.:-))

said...

இசக்கிமுத்து,

கருத்துக்கு நன்றி.

said...

கோவை மணி,

"பீளமேடு புயல்கள்" சூப்பர் :-))

word verification பற்றி விவரிச்சதற்கு நன்றி.

said...

தென்றல்,

கவிதைகள படிச்சு கருத்துக்களை சொன்னதுக்கு நன்றி நண்பரே.

பீளமேடு மிரட்டல்னு சொல்லீட்டீங்க.
நிறைய பீளமேட்டு-க்காரங்க இருக்காங்க இங்க.