Saturday, April 7, 2007

மறையாத மகாத்மாக்கள்

தேசிய மகாத்மாக்கள்
சிரித்தபடி சிறை வைக்கப்பட்டார்கள்
காகிதங்களில்;

ரூபாயாக
டாலராக
ரூபிளாக
அந்தந்த நாட்டுத்
திறந்தவெளி
காகிதச் சிறைகளில்;

பணங்களின்
முகப்பில் பவனி
வருகிறார்கள்
மனித மனங்களில்
மறந்துவிட்டபடியால்;

மெலிதாய் உதிர்க்கிறார்கள்
புன்னகையை
செல்வந்தன் பெட்டியில்
சிறைப்பட்ட சோகமா
ஏழையின் வயிற்றை
நிரப்பிய மகிழ்ச்சியா
என்று புரிந்து
கொள்ள முடியாதபடி;

அவர் புன்னகை
ஏழையின் கைகளில்
ஜொலிக்க
அவன் ஒளிர்விடும்
சிரிப்பில் தெரியும்
இறைவன் இருப்பு;

கைவிட்டு கைமாறி
கசங்கி கிழிந்து
வாடிப் போயிருந்தும்
வாடாமல் மனிதர்களை
வாழ செய்து
மறைந்தும் மறக்காத
அவர் தியாகங்கள்;

கொள்கைக்கு எதிராய்
துவேஷக் கொடிகள்
பிடித்த பகைவர்
விரல்கள் ஐந்தும்
இப்போது தடவி
மகிழ்கின்றன
அவர் முகப்பை;

"மகாத்மாக்கள் மறைவதில்லை"
பொதிந்து கிடக்கும்
உண்மைகள்
குலுங்கிச் சிரிக்கின்றன
எங்கோ பதுங்கி நின்று;

2 comments:

said...

ரமேஷ்,

உங்கள் கவிதைகள் தொடர்ந்து படிக்கும் அன்பர்களில் நானும் ஒருவன். நல்ல கருத்துக்களை வைத்து கவி புனைகிறீர்கள். வாழ்த்துக்கள்.

தேசிய மகாத்மாக்கள்
சிரித்தபடி சிறை வைக்கப்பட்டார்கள்
காகிதங்களில்.

இந்த வரிகள் Haikku தொனியில் இருக்கிறது.

நிறைய எழுதுங்கள் அன்பரே!

Regards
Saradha

said...

கருத்துக்கு நன்றி சாரதா.
தொடர்ந்து படியுங்கள்.

அதுசரி, நீங்கள் ஆண் ரசிகரா, பெண் ரசிகையா?

இந்தக் கேள்விக்கு என்னை மன்னிக்கவும் :-))