Friday, March 2, 2007

நிலவு "டால்பின்"

(திண்ணை இதழில் மார்ச் 1, 2007 அன்று வெளியிடப்பட்ட கவிதை)

காலை முதல் மாலை வரை
புன்முருவல் பூத்த
லேலாண்ட் லாரியாக
அலுவலகத்திலே...
மாலை முதல் இரவு வரை
சக குடும்பத்தினர்க்கு
இலவச கால் டாக்சியாக
வீட்டினிலே...
அரிதாரமில்லாமல் அரங்கேறும்
தினசரிக் கூத்தில்
மீதமான சக்கைகளையும்
பிழிந்தெடுத்த கவலைகளையும்
யாரிடமும் திணிக்க
திரனில்லாமல்
ஊரே கண்மூடி உறங்கியபின்
சத்தமில்லாமல்
கதவுகளை திறந்து
மொட்டை மாடிக்குப் போய்
காயாத கருங்கடலில்
வெள்ளி மீன்களின் நடுவே
உலவிவந்து
வெள்ளை டால்பினாக
முற்றத்தின் உச்சியிலே
வழி மேல் விழி வைத்து
எனக்காக காத்திருந்த
அவளிடம்
பேசினேன் வாய்திறக்காமல்
கேட்டேன் சத்தமில்லாமல்
பார்த்தேன் விழி இமைக்காமல்
ஆழப் பரிவர்த்தனையால்
சம்பவித்த மனக்குளியலில்
அழுக்கினை கரைத்துவிட்டு
பாரமிழந்து திரும்ப வந்து
போர்வைக்குள்ளே
புகுந்துகொண்டேன்
நள்ளிரவுக் காதலியின்
நாளை வருகையை
ஆவலோடு எதிர்நோக்கி!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30703012&format=html

5 comments:

said...

It is very very interesting and wonderful Kavithai. Ravi

said...

ரொம்ப நல்லா இருக்கு ரமேஷ்... அன்றாடம் வரும் சலிப்பு..ஹ்ம்ம்ம்...

said...

ரவி, மங்கை

வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி.

மங்கை,

அன்றாடம் வரும் சலிப்பு- especially family people க்கு. இந்த சாதாரண நிகழ்வை கொஞ்சம் வித்தியாசமா சிந்திச்சு எழுதின கவிதை. நிலவு பற்றி இலட்சக்கணக்கான கவிதைகள் இருக்கின்றன. நிலவை "டால்பின் - ஆக வர்ணிச்சு எழுதின இலட்சத்து ஒன்றாவது கவிதை :-))

said...

கட்டிடக்காட்டு இயந்திரத்தன வாழ்வுக்கு மன நிம்மதி தருவது நிலா மங்கை தானே.

said...

நளாயினி,

நீங்கள் சொல்வது உண்மை. உங்கள் கருத்துக்கு நன்று.