தமிழ்மணத்தில் 40-க்கு மேல் பின்னூட்டம் வாங்குவது எப்படி?
Labels:
நகைச்சுவை
இந்த சூட்சுமத்துக்கு விடை தெரியாமலா இத்தனை நாள் முழித்தேன்? :-0
40 க்கு மேல பின்னூட்டம் வாங்கினா தமிழ்மணத்தில் சிறப்பு கவனிப்பு இருப்பதால் அப்படி வாங்குவதற்கான ரகசியத்தை இங்கே போட்டு உடைக்கிறேன். எல்லாருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையோடு!
ஒரு சின்ன கணக்கு. பயப்பட வேண்டாம். 2-ம் வகுப்பு படிச்சிருந்தா போதும். ;-))
x = உங்க தற்போதய வயசு
y = 40 - x
உதாரணமா உங்க வயசு 28-ஆக இருந்தா,
y = 40 - 28 = 12
அப்போ, 40-ஐ தொட 12 வருடங்கள் பொறுத்திருக்கனும்.
40 வயச தொட்டதுக்கப்புறம் வாங்கற பின்னூட்டங்களெல்லாம், 40 க்கு மேல் வாங்கறதுதானே?
ரொம்ப காலம் விஞ்ஞானியா இருந்து கண்டுபிடிச்ச சூத்திரம். எஞ்ஜாய் பண்ணுங்க தோழர்களே!
29 comments:
ஹி..ஹி..:))
சூப்பர் கணக்கு போங்க.
இந்த இடுகை சூடான இடுகைகளில் வர வாழ்த்துகிறேன். :-)
அடப் பாவிகளா! இவரு ஒருத்தரு தான் நல்லவரா இருந்தாரு. இவரையும் கெடுத்துட்டீங்களா?
நல்லா இருங்கப்பு
//இந்த இடுகை சூடான இடுகைகளில் வர வாழ்த்துகிறேன். :-)//
நானும் இதை வழிமொழிகிறேன்....
வேற என்ன இங்க கருத்து சொல்ல.... :)))))
:D
சாரதா,
வருகைக்கு நன்றி!
குமரன்,
நம்ம இடுகைக்கு recommend பண்ணுனீங்க. உங்க இடுகையை சூடான பதிவில் போட்டுட்டாங்க!
சத்யப் பிரியன்,
நல்லவர்னு conduct certificate குடுத்துடீங்க. உச்சி குளிர்ந்து என்ன சொல்றதுன்னே தெரியல. முதல்ல என் நண்பர்களுக்கு சொல்லி புரிய வைக்கணும் :-))
இராம்,
உங்க வழிமொழிதல் வேலை செய்யலியே. இருந்தாலும், வழிமொழிஞ்சதுக்கு நன்றிங்க!
boston bala,
வாய்விட்டு சிரிச்சு மத்தவங்க நோயை போக்கீட்டீங்க. நன்றி!
உங்க இடுகையை சூடான பதிவில் போட்டுட்டாங்க!
போடரதில்லீங்க. தானாவே வருது
விரைவில் மொக்கைப் போடுவது எப்படி என்ற நூலையும் எழுதி வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
:)
ஆஹா..ரமேஷ்..இப்ப ஜோதில ஐக்கியம் ஆகியிருக்கீங்க...good good..:-)))
விரைவில் மொக்கைப் போடுவது எப்படி என்ற நூலையும் எழுதி வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
கோவி. கண்ணன்,
இப்பதான் முன்னுரை போயிட்டிருக்கு. உங்கள் ஆசிப்படி எல்லாம் நடக்கும் நண்பரே!
மங்கை,
இந்த மாதிரி பதிவுக்குத் தான் ஜோதி திருவண்ணாமலை ஜோதியா கொழுந்துவிட்டு எரியுதுங்க :-))
போடரதில்லீங்க. தானாவே வருது
அனானி,
இத பத்தி எனக்கு ரொம்ப தெரியாதுங்க. உங்க செய்திக்கு நன்றி!
உங்க கணக்குப்படி நான் 40 பின்னூட்டல் வாங்க 18 வருசமாகுமே :-))
என்னோட வாழ்த்து பலிச்சிருச்சு பாருங்க. இப்ப மகிழ்ச்சியா? :-)
எப்பா தெய்வமே உன் கால் எங்க சாமி இருக்கு?? இப்படி கொளுத்தி போடற... உன் திறமையை மெச்சினேன் ;)
ஐயா நீங்களும் கோயம்பத்தூர் குசும்பா யா? வாங்க ஜோதில ஐக்கியமாகுங்க!
அனானி,
அதனால பரவாயில்ல. இப்போ நீங்க 22க்கு மேல வாங்கலாம்.
குமரன்,
தயவு செய்து ஒவ்வொரு இடுகையிலும் உங்க கைரேகைய பதிச்சுட்டு வாழ்த்திட்டு போங்க அய்யா :-))
we the people,
ஐயா நீங்களும் கோயம்பத்தூர் குசும்பா யா
அப்ப அப்ப நம்ம ஊர் பெருமைய காப்பாத்த வேணாமா நண்பரே!
Same blood!
ஆராச்சி தொடரட்டும்...:)
அது சரி போட்டுத்தாக்குங்க!
நானும் GRGயில் பீளமேட்டில் வாழ்ந்தவன் தான்!நான் லட்சுமிபுரம், சங்கர் நகர் லே அவுட்ல் இருந்தோம்! இப்ப எங்க வீடு ராமநாதபுரத்தில் இருக்கு, உங்க வீடு எங்க இருக்குங்க?
மின்னுது மின்னல்,
விஞ்ஞானிகளுக்கு let out வேணாமா?
வந்து தீர்த்தத்தை அள்ளி தெளிச்சதுக்கு நன்றி நண்பரே!
we the people,
ஏற்கனவே இங்க ஒரு "பீளமேடு புயல்கள்னு ஒரு சின்ன கிரிக்கெட் டீம் ஆரம்பிச்சு வச்சிருக்கோம். நீங்களும் வந்து ஐக்கியமாகுங்க :-))
நான் பிறந்த்ய் வளர்ந்து படிச்சது எல்லாமே பீளமேடுதானுங்க. பீளமேட்டை விட்டு வந்து சரியா 18 வருசமாய் போச்சு. என் பெற்றோர்கள் பீளமேடு புதூரில்தான் இருக்காங்கோ. USக்கு வந்து 12 வருசம் ஓடிப் போயிடுச்சுங்கோ. குல தெய்வம் கோயிலுக்கு போற மாதிரி, வருசம் ஒருமுறை நம்மூரை தொட்டு நன்றி சொல்ல மறப்பதில்லை.
அடிக்கடி கேட்டு ரசிக்கிற பாட்டு நம்ம ராசா பாடின "சொர்க்கமே என்றாலும் அது நம்மூர (பீளமேட்டை) போல வருமா"
உங்க நட்பு கிடைச்சது சந்தோஷமா இருக்குங்க நண்பரே!
இது தெரியாம, நான் என்னோட பதிவுக்கு யாரும் கமெண்டே போடாம இருக்கறாங்களேன்னு வருத்தத்துல இருக்கறேன்.
வேளராசி,கோவை.
velarasi.blogspot.com
Ahaa. su per ngo
என்ன ரொம்ப நாளா ஆளக் கானோம்
அட பராவயில்லையே! நல்ல ஐடியாவா இருக்கு.
ரூம் போட்டு யோசிப்பீங்களோ!
அட, நல்லா குறட்டையிட்டு தூங்கீட்டிருந்த சிங்கத்த உசுப்பீட்டீங்கய்யா, உசுப்பீட்டீங்க்க!
ஆறு மாசமா, தூசி படிந்து, அழுக்காயிருந்த போட்டோவ ஃப்ரேம் போட்டு மாட்டீங்க.
ஹும்...இனிமேலதான் யோசிக்கணும் என்ன பண்றதுன்னு...சரி பழைய பஞ்சாங்கத்த பாடவேண்டீதுதான்...தத்துவமா பொழிய வேண்டியதுதான்.
வேலரசி, தமிழ்நெஞ்சம், ஸயீத்...நம்ம வீட்டுப் பக்கம் தல காட்டினதுக்கு ரொம்ப நன்றீங்கோ!
மங்கை--வேலை, வேலைன்னு கழுத்த அறுக்கறானுக...எதுக்கு அப்படி வேல செய்யனும்னு எனக்கே புரியல...
இது எந்தக்காலத்து போஸ்ட்னு எடுத்து பாபா ஸ்னாப் ஜட்ஜ்மென்ட்டில் போட்டிருக்கார்?
மொக்கையிலும்... கொடுமைப்பா இது :-))
வாங்க சேதுக்கரசி,
ஆறு மாசம் கழிச்சுகூட நம்ம பதிவ யாரோ படிக்கறாங்கன்னு நினைக்கும்போது உடம்பு புல்லரிச்சுப் போச்சு.... :-)))
Post a Comment