ஒரு மழையில் மனது

முகம் கருத்தாள்
பூமியெங்கும்
மண்வாசனை!
முன்னிரவு நிசப்தம்
முழுதாய் கரைத்து
இமைகளை சாத்தி
இதயம் விழிக்கச்செய்த
தவளைகளின் அதறல்கள்.
தண்ணீரில் மிதக்கும்
காகித படகில்
சுமையாய் வீற்றிருக்கும்
குழந்தையின் மகிழ்ச்சி.
துள்ளித்தெறித்த
திவலைகளின் மோதலில்
உடைந்து பிறக்கும்
கண்ணாடிக் குமிழிகள் .
பச்சைமேனியில்
படர்ந்திருக்கும்
துளிகளில் ஒளிரும்
ஆயிரம் சூரியன்கள்.
தெருக்களின் ஈரம்
என் இதயத்தில்
வரவில்லை
இன்னும்.
ஊரெங்கும் வெள்ளம்
வீடுகள் படகாக
படகுகள் வீடாக
குத்திட்ட கண்கள்
காத்திருந்தது
தொலைகாட்சியில்
அந்த ஒரு
செய்திக்கு மட்டும்.
"நாளை விடுமுறை"
2 comments:
மழை பெய்தால் விடுமுறை நாடும் குழந்தை மனது வாழ்க!
மழை இல்லாமல் பயிர் வாடுது.
மழை பெய்யட்டும் உங்கள் தயவால்.
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி அக்கா. உங்க விருப்பமும் என் விருப்பமே!
Post a Comment